திங்கள், 5 அக்டோபர், 2009

எண் - எழுத்து கவிதை

"ஓர் எழுத்து கவிதை "நீ"!


இரண்டு எழுத்து கவிதை "நான்"!


மூன்று எழுத்து கவிதை நம் "காதல்"!


நான்கு எழுத்து கவிதை நம் "உள்ளம்"!


ஐந்து எழுத்து கவிதை நம் "திருமணம்"!


ஆறு எழுத்து கவிதை நம் "இல்வாழ்க்கை"!


ஏழு எழுத்து கவிதை நாம் "தாய்‍ ‍‍தகப்பன்".....!"


எம்.எஸ்.மோகன்ராஜ் ‍ 9788330607

செவ்வாய், 14 ஜூலை, 2009

உள்ளம்
"கடவுளின் இருப்பிடம்
என் இல்லம்....!
காதலின் பிறப்பிடம்
அவள் உள்ளம்....!"
***மோகன்ராஜ் 9788330607***

புதன், 27 மே, 2009

மரணம்


நீ...


பறித்த மலருக்கு


ஒருநாள்தான் மரணம்...


உன்னால் பறிபோன


என் இதயத்திற்கு


தினந்தோறும் மரணம்....


*** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 ***

கல்லறை


நான் பிறப்பதற்கு


*** கருவறை ***


கடடினாள் அன்னை....!


நான் இறப்பதற்கு


*** கல்லறை ***


கடடினாள் காதலி....!


*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

சனி, 23 மே, 2009

சூரியன்
அன்பே...
நீ என்ன சூரியனா....?
உன்னை பார்க்கும்பொழுது
மலர்கிறேன்....!
உன்னை பார்க்காதபொழுது
வாடுகிறேன்....!
**** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 ****

வெள்ளி, 22 மே, 2009

"மலர்""மலர் என்று நினைத்து
உன்னை இதயத்தில் வைத்தேன்....!
ஆனால்,
முள்ளாக குத்துகிறாய்....!
வலியால் துடிக்கிறது
*** இதயம் *** ....! "
*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

"ஹிதேந்திரனைப்போல"


நான் இறந்தாலும்

உயிர் வாழ விரும்புகிறேன்

உனது இதயமாக.....!

இதயத்தை

தானமாக கொடுத்த

*** ஹிதேந்திரனைப்போல ***.....!

*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

திங்கள், 18 மே, 2009

சந்திப்பு


என்றும் இல்லாமல்,

அன்று மட்டும்
தேர்வு அறையில்

என்னருகில் அமர்ந்தாள்,

அப்பொழுதே புரிந்துகொண்டேன்

இதுதான்

கடைசிசந்திப்பு என்று.....!

**** இவன் மோகன்ராஜ் 9788330607 ****

திரையரங்கு


தெரியமல் அறிமுகமானோம்

**கலையரங்கில்**....!

தெரிந்தே பிரிந்துபோனோம்

**திரையரங்கில்**....!

*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

வியாழன், 14 மே, 2009

எதிரி


"என்னை மட்டுமே


நேசிக்கத்தெரிந்த என் இதயம்


இப்பொழுது,


உன்னையும் நேசிக்கிறது....


உன்னை நேசிக்கத்


தொடங்கிய நாள் முதல்


என் இதயம்


என்னை மறக்கத்தொடங்கிவிட்டது....


நான் உன்னை மறந்தபோதும்


என் இதயம் இன்னும்


உன்னை மறக்கவில்லை.....


உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்


என் இதயத்தை உனக்கே தருகிறேன்....


நேற்று வரை நண்பனாய்


இருந்த என் இதயம்


இன்று முதல் எனக்கு "எதிரி" ஆக தெரிகிறான்.....!"


*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

"சிறைத்தண்டனை"


ஒரு தவறும்செய்யவில்லை....ஆயினும்,"சிறைத்தண்டனை" அனுபவிக்கிறதுஇதயம்ஆயுள் கைதியாய்.....!**** இவன் மோகன்ராஜ் 9788330607 ****

கூண்டுக்கிளிசுதந்திர பறவையாய்சுற்றிதிரிந்த நான்கூண்டுக்கிளியாய் அடைபட்டுக்கிடக்கிறேன்இன்று,காதலால்......!***** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 *****

புதன், 13 மே, 2009

உருகுகிறேன்


"தீக்குச்சியாய்


வந்து என்னை


ஏற்றினாள்....


அவள்


எரிகிறாளோ, இல்லையோ....


நான் உருகுகிறேன்


*மெழுகுவர்த்தியாய்*......!"


****** இவன் மோகன்ராஜ் 9788330607 ******


"உன்னை நினைக்க


இதயம் வலிக்கிறது......


உன்னை மறக்க


இதயம் இறக்கிறது.......!"****** இவன் ‍மோகன்ராஜ் 9788330607 *******

அவள் வருவாளா


"நான்


துன்பத்தில் வாடியபோதும்,


தோல்வியை தழுவியபோதும்,


சோதனையை சந்தித்தபோதும்,


என் இதயம்


ஆறுதல் சொல்லும்...


இன்று என் இதயமே அழுகிறது


ஆறுதல் சொல்ல


அவள் வருவாளா...!"


****** இவன் ‍மோகன்ராஜ் 9788330607 *******

தண்டனை


"உன்னை மறக்கும் பொழுது


மரண தண்டனை....!


உன்னை நினைக்கும் பொழுது


ஆயுள் தண்டனை....!"


****** இவன் ‍மோகன்ராஜ் 9788330607 *******

திங்கள், 11 மே, 2009

கண்மூடினால்என்னை விட்டு


வெகுதூரம்


நீ... சென்றாலும்....!


என் முன்னே தோன்றுகிறாய்


நான் கண்மூடினால்....!இவன்‍ மோகன்ராஜ் 9788330607

மழைத்துளி


நிலமாக நீ,

உன்னை அடைய

எத்தனை தடைகள்....!

ஆயினும்,

நான் உன்னை அடைகிறேன்

*மழைத்துளியாக*....!


இவன்‍ மோகன்ராஜ் 9788330607

குழந்தை
தாயை காணாத

குழந்தையைப்போல்

விடாப்பிடியாக அலுகிறது,

*என் இதயம்*

அவளை காணாமல்.......!

இவன்‍ மோகன்ராஜ் 9788330607

அன்னை

யாரோ ஒருவரை
*உலகம்* என்று
நீ வாழ்கிறாய்........!
நீயே உலகம் என்று
வாழ்கிறாள் உன் *அன்னை* ....!

இவன்‍‍‍‍‍‍‍‍- மோக‌ன்ராஜ் 9788330607

சனி, 9 மே, 2009

மௌனம்
அன்று குழந்தையாய்
நான் பேசிய வார்தையை
உணாந்தாள் என் அன்னை...!

இன்று மௌனமாய்
நான் பேசுகிறேன் அதை
உணர்கிறாள் என் காதலி.....!
மோகன்ராஜ் 9788330607